கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

முன்னாள் முதல்வர்கள் ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் முதல்வர்கள் தங்களது ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2016, 7:01 am

புது தில்லி: முன்னாள் முதல்வர்கள் தங்களது ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2004ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி அனில் ஆர் தாவே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், எந்த அரசு பங்களாக்கங்களையும், பதவி இழந்தவர்கள் இரண்டு அல்லது 3 மாதங்களில் காலி செய்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரையும் கொண்ட அமர்வு அளித்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், தங்கள் ஆயுட்காலம் வரை அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, முன்னாள் முதல்வர்கள் மற்றும் தகுதியற்றவர்களுக்கு அரசு பங்களாக்களை ஒதுக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.