புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

தில்லி ஃபிக்கி கட்டடத்தில் தீ: தேசிய இயற்கை அருங்காட்சியகம் பெருத்த சேதம்

தில்லியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஃபிக்கி கட்டடத்தில் இன்று நள்ளிரவு நேரிட்ட மிகப் பயங்கர தீ விபத்தில், கட்டடத்தில் இருந்த தேசிய இயற்கை அருங்காட்சியகம் பெருத்த சேதமடைந்துள்ளது.

Updated On :26 ஏப்ரல் 2016, 6:37 am

புது தில்லி : தில்லியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஃபிக்கி கட்டடத்தில் இன்று நள்ளிரவு நேரிட்ட மிகப் பயங்கர தீ விபத்தில், கட்டடத்தில் இருந்த தேசிய இயற்கை அருங்காட்சியகம் பெருத்த சேதமடைந்துள்ளது.

நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் நேரிட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடினர்.

மிக அடர்ந்த புகையில் சிக்கிய 6 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்தில், தேசிய அருங்காட்சியகத்தில் இருந்த மிகப் பழமையான, புராதன சிறப்பு வாய்ந்த பல பொருட்கள் தீக்கிரையானதாகத் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.