கடந்த 2014ம் ஆண்டு கள்ளக்காதலுக்காக பெற்ற மகள் மற்றும் மாமியாரை கொலை செய்து, கணவரை கொல்ல முயன்ற வழக்கில், காதலனுக்கு தூக்கு தண்டனையும், பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பொறியாளர்களான நினோ மேத்யூ மற்றும் அனு ஷாந்தி ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையில், குழந்தையை இழந்த அனு ஷாந்தியின் கணவர் லிஜேஷுக்கு ரூ.50 லட்சமும், மனைவியை (லிஜேஷின் தாய்)இழந்த தங்கப்பன் செட்டியாருக்கு ரூ.30 லட்சமும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டைக் கொலை வழக்கு விசாரணை முடிவடைந்து, கடந்த வாரம், தீர்ப்பளித்த நீதிபதி, ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மென்பொருள் பொறியாளர்கள் அனு ஷாந்தி - நினோ மேத்யூ இருவருமே குற்றவாளிகள் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று இருவருக்குமான தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி, 'அரிதிலும் அரிதான வழக்கு' இது. 'கடுமையான', 'கொடூரமான' குற்றமாக இது எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், இரட்டைக் கொலையிலும் அனு ஷாந்தி முழுதாக ஈடுபட்டுள்ளார். அவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் ஒரு பெண் என்பதால் வழங்கப்படவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.
குற்றவாளி அனு ஷாந்தி தாய்மையையே அவமதித்துவிட்டார். 3 வயதுக் குழந்தையையும், 60 வயதான பெண்ணையும் இவர்கள் கொன்றுள்ளனர் என்று நீதிபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


