தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பருவமழை: தமிழகத்தில் வழக்கைத்தைவிட குறைவாக இருக்கும்

நடப்பு ஆண்டில் இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான அளவு பருவமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2016, 12:53 pm

புது தில்லி: நடப்பு ஆண்டில் இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான அளவு பருவமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நடப்பு பயிர் ஆண்டுக்கான (ஜூலை- ஜூன்) வானிலை முன்னறிவிப்புகளை இன்று வெளியிட்டது.

தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் லஷ்மன் சிங் ரதோர் பேசியதாவது:

நீண்டகால சராசரி அளவின்படி இந்த ஆண்டு பருவமழை 106 சதவீதமாக இருக்கும். மேலும், பருவமழை நாடு முழுவதும் பரவலாக இருக்கும்.

அதே நேரத்தில் வடகிழக்கு இந்தியாவிலும், தென்கிழக்கு இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் வழக்கத்தைவிட குறைவான அளவே பருவமழை இருக்கும்.

வறட்சியின் பிடியில் இருக்கும் மகராஷ்டிரம் மாநிலத்தில் நிகழ் ஆண்டில் நல்ல மழைபெய்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றார்.

நீண்டகால சராசரி மழை அளவு 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அந்த ஆண்டில் மழை அளவு குறைவாகவே இருக்கும். 90 முதல் 96 சதவீதம் வரை இருந்தால் வழக்கைத்தைவிட குறைவான அளவு இருக்கும் என்றும், 96-104 சதவீதம் வரை இருந்தால் வழக்கமான மழை அளவு இருக்கும் என்றும், 104-110 சதவீதம் வரை இருந்தால் வழக்கைத்தைவிட அதிகமான மழை இருக்கும் என்றும், 110 சதவீதக்குக்கும் மேல் இருந்தால் அதிக அளவு மழை பெய்யும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 15 சதவீதம் அளவுக்கு பங்களிக்கிறது. மேலும், இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

கடந்த 2015-16 பயிர் ஆண்டில், பருவமழை குறைவாக இருந்ததால் 10 மாநிலங்கள் வறட்சி பாதிப்பு மாநிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்காக மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி வரை வறட்சி நிவாரணம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.