/

தில்லியில் 2 குழந்தைகள் உள்பட தாய் மர்மக் கொலை: வீட்டு உரிமையாளர் மீது சந்தேகிப்பதாக கணவர் புகார்

மேற்கு தில்லியில் ரஹூபீர் நகரில் 2 குழந்தைகள் உள்பட தாய் மர்ம முறையில் இறந்து கிடப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:46 am

ANI

மேற்கு தில்லியில் ரஹூபீர் நகரில் 2 குழந்தைகள் உள்பட தாய் மர்ம முறையில் இறந்து கிடப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஹூபீர் நகரில் தாய் உள்பட 2 குழந்தைகள் மர்ம முறையில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த தகவலின்படி, விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஜெப்பூரில் இருந்து வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவர், மனைவி, குழந்தைகள்  இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் போலீசாரிடம், தன் வீட்டு உரிமையாளர் மனைவி, குழந்தைகள் மீது அன்புடன் இருந்ததாகவும், இந்த கொலையில் அவர் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.