எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் மகன் திடீர் கைது

பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் மகன் பிரவீன் மாஞ்சியை பாலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:42 am

ஆர். வெங்கடேசன்

பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் மகன் பிரவீன் மாஞ்சியை பாலீஸார் கைது செய்துள்ளனர்.

பிகாரில் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் தொடங்கி 5 கட்டங்களாக் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 243 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளதால், தீவிக வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐம்பதாயிரத்திற்கும் மேல் ரொக்கமாக கொண்டு செல்லக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், செகனாபாத்தில் மாவட்டத்தில் உள்ள மக்தாம்பூர் நிலைய போலீஸா அங்குள்ள முக்கிய சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 4.65 லட்சம் ரூபாய் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் மகன் பிரவீன் மாஞ்சியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜித்தன் ராம் மாஞ்சி தற்போது பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.