திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வாரங்கல் தொகுதியை தக்கவைத்தது டி.ஆர்.எஸ்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வெற்றி பெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:37 am

PTI

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வெற்றி பெற்றது.

தாழ்த்தப்பட்டோருக்கான அந்த தொகுதியில் டி.ஆர்.எஸ். கட்சியின் பசுனூரி தயாகர் 4.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தயாகர் மொத்தம் 6,15,403 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சத்தியநாராயணாவை தோற்கடித்தார். சத்தியநாராயணா 1,56, 311 வாக்குகள் பெற்றார்.

இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் தேவ்யா1,30,178 வாக்குகள் பெற்றார்.

வாரங்கல் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த கடியம் ஸ்ரீஹரி, துணை முதல்வராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இத்தொகுதிக்கு நவம்பர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

வாரங்கல் மக்களுக்கு பெரிய நன்றி, இந்த வெற்றி மேலும் உத்வேகமாக வேலை செய்வதற்கு ஊக்கப்படுத்தும் என சந்திரசேகர் ராவ் மகனும் அமைச்சருமான கே,டி, ராமராவ் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் ராவ் தெலுங்கானா முதல்வராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் இடைத் தேர்தல் இது என்பதால், இது ஆட்சியின் மீதான கருத்து கணிப்பாகவே கருதப்பட்டது.

இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் சுஷில்குமார் ஷிண்டே, மீராகுமார், குலாம்நபி ஆசாத், திக் விஜயசிங் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.