மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்த சம்பவம்: மருத்துவர், செவிலியர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On :18 நவம்பர் 2015, 8:43 am

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தனியாக எடுத்து குப்பைத் தொட்டியில் போட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் தையபா இக்பால் மற்றும் செவிலியர் மாதுரி மீது அரசியலப்புச் சட்டம் 304, 315 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று மாலை அவருக்கு மருத்துவரும், சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் குழந்தையை பலமாக இழுத்தாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழந்தையின் தலை மட்டும் தனியாக வந்துள்ளது.

இதையடுத்து, பதறி போன அவர்கள் குழந்தையின் தலையையும், சிதைந்த உடல் பாகங்களையும் அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய உறவினர்களும் பிறந்த குழந்தையை கேட்ட போது பிரசவம் பார்த்த மருத்துவரும், நர்சுகளும் சேர்ந்து குழந்தையின் தலையை தனியாக எடுத்ததும், பின்னர் அதனுடன் உடலின் மற்ற பாகங்களையும் குப்பைத் தொட்டியில் வீசியதும் அவர்களுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ராகேஷ்குமார் சிங் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.