ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கம்: மேல்முறையீடு செய்ய மஹாராஷ்டிர அரசு முடிவு

சுவிஸர்லாந்தின் நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என மஹராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2015, 9:20 am

சுவிஸர்லாந்தின் நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என மஹராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து அரசின் நீதி துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அவர்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மஹாராஷ்டிர அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத் துறை அமைச்சர் கிரீஷ் பாபட் கூறினார்.

மேகி நூடுல்ஸின் சில பாக்கெட்டுகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பாக்கெட்டுகளில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருள்கள் இருக்கலாம்.

பொதுமக்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீட்டிக்கவே அரசு விரும்புகிறது என்றார் கிரீஷ்.

மும்பை உயர்நீதிமன்றம், மேகி மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்கு மஹாராஷ்டிர அரசு தீர்மானித்துள்ளது.

அரசு சோதனை கூடங்களில் நடைபெற்ற மேகி நூடுல்ஸ் சோதனைகளில் எவ்வித நச்சுப் பொருள்களும் இல்லை என்ற உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மும்பை உயர்நீதி மன்றம் மேகி மீதான தடையை நீக்கியது. முன்னதாக மேகி நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமான காரீயம் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது.

தடை நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்-லைனில் விற்பனைக்கு வந்தபோது, ஐந்தே நிமிஷங்களில் 60 ஆயிரம் மேகி பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.