மும்பையின் புறநகரான தாதர் பகுதியின் குடியிருப்பு ஒன்றில், இந்திய கப்பற்படை அதிகாரியின் மனைவி தலையில் பயங்கர காயத்துடன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி பூங்கா அருகே லுயிஸ் கோர்ட் குடியிருப்பில் வசித்து வந்த 57 வயதாகும் பெலஸா கார்டோஸோ ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த அவரது வீட்டு வேலைக்காரப் பெண், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த பெலஸாவின் கணவர் தற்போது நடுக்கடலில் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெலஸாவின் வீட்டில் தச்சு வேலை செய்ய வந்த நபர்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் அந்த நபரை தேடி வருகிறார். கொலைக்கான பின்னணி தெரியவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

இது சினிமா ஷூட்டிங் அல்ல; வாக்குச் சாவடி! சிம்ரன் பதிவு

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

