தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அமெரிக்காவில் 1.9 லட்சம் தமிழ் பேசுவோர்:மக்கள்தொகை கணக்கெடுப்பில் தகவல்

அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 60 மில்லியன் பேர் ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளை தங்கள் வீடுகளில் பேசுகின்றனர். இதில் தமிழ் பேசுவோர் 1,90,000 பேர் உள்ளனர்.

News image
Updated On :4 நவம்பர் 2015, 9:26 am

அமெரிக்க கணக்கெடுப்பு நிறுவனம், அங்கு வசிக்கும் மக்களின் சமூக நிலை குறித்த கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்களை அண்மையில் வெளியிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட, இத்தரவுகளில், சுமார் 6.5 லட்சம் இந்தி பேசும் மக்கள் அமெரிக்காவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வசிக்கும் சுமார் 60 மில்லியன் பேர், ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளை தங்கள் வீடுகளில் தொடர்பு மொழியாக பயன்படுத்தி வருவதாக அந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக ஸ்பானிஷ் மொழி பேசுவோர் 37.4 மில்லியன் பேர் உள்ளனர்.

இந்திய மொழிகளில், இந்தி பேசும் மக்கள் 6.5 லட்சம் பேரும், உருது பேசுவோர் சுமார் 4 லட்சம் பேரும் அமெரிக்காவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தி, உருது தவிர பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா, அசாமி, காஷ்மிரி, பிகாரி பேசுவோரும் அங்கிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தென்னக மொழிகளில் தெலுங்கு பேசுவோர் முதலிடத்தில் (2.50 லட்சம்) உள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழ் பேசுவோர் 1.90 லட்சம் பேரும், மலையாளம் பேசுவோர் 1.46 லட்சம் பேரும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.