புதுதில்லியில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உபர் நிறுவனத்தைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவருக்கு அவர் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுதில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மத்திய தில்லியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் குர்கானில் உள்ள ஒரு நிறுவனத்தில் நிதி அலுவலராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு பணி முடித்து வீடு திரும்பும்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுகுறித்த தில்லி காவல் துறையினர் உபர் கால்டாக்சி நிறுவனத்தைச் சேர்ந்த டிரைவர் சிவகுமார் யாதவ் (32) என்பவரைக் கைது செய்து தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி காவேரி செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
அதில், சிவகுமார் அப்பெண்ணை கட்டாய திருமணம் செய்வதற்காக கடத்தியதோடு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இக்குற்றத்துக்காக அவர் ஆயுள் முழுவதும், அதாவது அவர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ. 21,000 அபராதமும் விதித்தார்.
இத்தீர்ப்பைக் கேட்ட சிவகுமாரின் மனைவி மற்றும் இரு மகள்கள், பெற்றோர் கதறி அழுதனர். மேலும், சிவகுமாரின் மனைவி நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார்.
மேலும், அவர் தனது உத்தரவில் தில்லி சட்ட உதவி மையம் பாதிக்கப்பட்டு பெண்ணின் குடும்பத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதோடு, குற்றவாளியின் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த வழக்கு விசாரணையின் போது காவல் துறையினர் 28 சாட்சிகளை முன்னிலைப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீல்சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த முதியவர்கள் அவதி!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!

இது சினிமா ஷூட்டிங் அல்ல; வாக்குச் சாவடி! சிம்ரன் பதிவு

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


