தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சான்று

தமிழகத்தின் மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பூலோக சக்கரம் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு இருந்துள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2015, 2:55 pm

ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் ஒசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுதில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சி. மேத்தா, எளிதாக கடத்தப்பட்டு வரும் ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் ஒசோன் படலத்தில் ஓட்டை விழுவதோடு, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது என குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஹைட்ரோப்ளோரோகார்பன் வாயுக்களால் மட்டுமல்ல மற்றும் பல காரணிகளாலும் ஒசோன் படலம் சேதமடைகிறது என்றது.

வழக்கை விசாரித்த தீர்பாய நடுவர் அமைச்சக அதிகாரிகளை கடிந்து கொண்டதோடு, ஒசோன் படலம் குறித்த இந்தியர்களே முதன் முதல் அறிந்துள்ளனர் என்றார்.

தமிழகத்தின் மதுரை மாநகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பூலோக சக்கரம் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்களுக்கு ஒசோன் படலம் குறித்த விழிப்புணர்வு இருந்துள்ளது. அமைச்சக அதிகாரிகள் வேண்டுமானால் அங்கு சென்று பார்வையிடலாம் என்றார் நடுவர்.

பூமிக்கு மேல சுமார் 15 முதல் 30 கிமீ உயரத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது ஒசோன் படலம். இது சூரியனிலிருந்து வரும் பி வகையான புற ஊதா கதிர்கள் பூமிக்குள் ஊடுவுறுவாமல் பாதுகாக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.