நாடாளுமன்றத்தை ஒழுங்காக நடத்துவதற்கு புத்தாண்டிலாவது தீர்மானம் எடுங்கள் என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாததால், நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என்றார் மோடி.
நோய்டாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாகப் பதவியை அனுபவித்த காரணத்தாலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகாக தாக்கினார். மேலும், அரசியல் காரணங்களால் நாட்டின் வளர்ச்சியை முடக்கக் கூடாது என்றார்.
சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் துரதிர்ஷ்டம். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கியுள்ளனர்.
நாளை ஜனவரி முதல் நாள். புத்தாண்டை கொண்டாடும் இந்நேரத்தில்,த நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்கு தீர்மானம் எடுங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்காதீர்கள்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் வேண்டுவது என்னவென்றால், நாடாளுமன்றத்தை சமூகமாக நடத்துவதற்கு ஒத்துழையுங்கள். அங்கு எனக்குப் பேச வாய்ப்பு கிடைக்காததால், மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். நாடாளுமன்றத்தில் பேசவும், விவாதிக்கவும், முடிவெடுக்கவும்தான் மக்கள் எங்களை அங்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தவர்களின் கோபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். அதேநேரத்தில் 60 ஆண்டுகள் பதவியை அனுபவித்தவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு அதிகாரம் இல்லை.
வரும் புத்தாண்டு முதல் மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு பணிகளுக்கான தேர்வுகளில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கான புத்தாண்டு பரிசாகும். இந்த உத்தரவை மாநில அரசுகளும், மாநிலப் பணிகளுக்கான தேர்வுகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


