தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரள அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம்: உம்மன் சாண்டி

புதிய மதுக்கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

News image
Updated On :29 டிசம்பர் 2015, 3:22 pm

கேரள அரசின் புதிய மதுக்கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம் என முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேரள அரசின் புதிய மதுக் கொள்கை என்பது நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது அரசின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

கேரளத்தின் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, மதுக்கொள்கை குறித்த தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுக்குள் கேரளத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வரும் வகையில், புதிய மதுக் கொள்கையை காங்கிரஸ் அரசு அறிவித்தது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் மதுக் கடைகளை மூடுவது, 5 நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஹோட்டல்களுடன் இணைந்துள்ள 700 மது பார்கள் மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை எதிர்த்து, மதுபானகூட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.