கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் ஒரு கூட்டமைப்பாக உருவாகும்: பாஸ்வான்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

PTI

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்தால் நல்லதுதான். குறைந்தபட்சம் இந்த மூன்று நாடுகளும் இணைந்து ஒரே கூட்டமைப்பு உருவாகலாம்.

இதன் மூலம் இப்பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

முன்னதாக நேற்று பேட்டியளித்த பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் இணைந்து ஒரே நாடாக உருவாகும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று விளக்கம் அளித்த பாஜக செய்தி தொடர்பாளர் எம்.ஜே.அக்பர், ராம் மாதவ் கூறியது அவரது சொந்த கருத்து என்றார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு லாகூர் பயணம் மேற்கொண்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு இறையாண்மை நாடுகள் என்று கூறியதை நினைவுகூர்ந்த அக்பர், அது உண்மையே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.