தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குறைந்த பயண நேர விமான சேவைகளில் அசைவ உணவு கிடையாது: ஏர் இந்தியா முடிவு

மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமான சேவையில் குறைந்த பயண நேரம் கொண்ட விமானங்களின் 2ம் வகுப்பில் இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2015, 10:53 am

மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமான சேவையில் குறைந்த பயண நேரம் கொண்ட விமானங்களின் 2ம் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி வரை பயண நேரம் கொண்ட ஏர் இந்திய விமான சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போது ஏர் இந்தியா விமானங்களில் சைவ மற்றும் அசைவ சான்ட்விட்ச்கள் மற்றும் கேக் வகைகள் பரிமாறப்பட்டு வருகிறது. ஜனவரி 1ம் தேதி முதல், குறைந்த பயண நேர விமான சேவைகளில் பரிமாறப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகளாக மாற்றப்பட உள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல் எகனாமிக் வகுப்புகளில் பயணம் செய்யும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் சூடான சைவ உணவு பரிமாற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரமே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எங்களது உணவுத் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வெறும் சான்ட்விட்ச் மற்றும் கேக் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி சூடான உணவு வழங்க திட்டமிட்டதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.