குறைந்தபட்ச தூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படுவதே இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்நாட்டில் 60 நிமிஷங்கள் முதல் 90 நிமிஷங்கள் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்படாது என செய்தி வெளியானது.
சமூகவலைத்தளங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், உள்நாட்டில் குறைந்த தூரம் பயணிப்போருக்கு தற்போது அசைவ உணவு ஏதும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் குளிர்ந்த சிற்றுண்டிகளுக்குப் (பிரட் சாண்ட்விட்ச்) பதில், சூடான சைவ சிற்றுண்டி வழங்கப்படும். வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இப்புதிய முறை நடைமுறைக்கு வருகிறது. பயணிகளிடையே உள்ள வரவேற்பை தொடர்ந்து இத்திட்டத்தை தொடருவதா என முடிவு செய்யப்படும்.
மேலும், 90 நிமிஷங்களுக்கு மேல் பயணிப்போருக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்படும் என ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


