வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருப்பதாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதன் ஏற்றுமதி ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறுமாத கால அளவில், 18 சதவீதம் சரிவடைந்து 4,85,930 டன்னாக குறைந்துள்ளது.
கடந்த 2014-15-ஆம் நிதி ஆண்டின் இதே காலத்தில், 5,89,900 டன்னாக இருந்தது என, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவம் தவறிய மழையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டன் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை, 425 டாலரிலிருந்து (ரூ.27,625), 700 டாலராக (ரூ.45,500) அதிகரித்தது.
இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. மொத்தவிலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 10 ரூபாய்க்கும் கீழ் சென்றதால் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது.
வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


