தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: காவலர் பலி

கிழக்கு தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட முயற்சியில் காவலர் ஒருவர் இறந்தார்.

News image
Updated On :23 டிசம்பர் 2015, 10:45 am

கிழக்கு தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக் கைதியை பழிக்குப் பழியாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட முயற்சியில், காவலர் ஒருவர் இறந்தார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் இர்பான் என்ற ஷைனி பேகல்வன். கிழக்கு தில்லியில் உள்ள கர்கர்தூமா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இர்பானை, தில்லி மூன்றாவது சிறப்புப் படையில் பணியாற்றும் காவலர் ராம் குமார் அழைத்து சென்றார்.

இருவரும் இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் காத்திருந்தபோது, இர்பானை கொலை செய்யும் நோக்கில் அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இர்பானும், காவலர் ராம் குமாரும் படுகாயமடைந்தனர்.

இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் ராம் குமார், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். குமாரின் உடலில் 4 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக போலீஸார் கூறினர். இர்பான் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்திய தில்லி போலீஸார், சீலம்பூர் அருகே 4 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் விசாரணைக் கைதி இர்பான், தாக்குதல் நடத்தியவர்களின் குழுவைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்திருப்பதும், பழிக்குப் பழியாக அவர்கள் இர்பானை கொல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது.

பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எவ்வாறு நுழைந்தனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் சம்பவத்தை விடியோ எடுத்த முக்கிய குற்றவாளி ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் முதன்மை நீதிபதி சுனீல் குப்தா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனிடையே தாக்குதலில் இறந்த காவலர் ராம் குமாரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.