தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் தலைமை சட்ட ஆலோசகர் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஆணையத்தை அமைத்து தில்லி ஆம் ஆத்மி அரசு இன்று உத்தரவிட்டது.
எனினும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விசாரணை ஆணையம் அமைப்பதற்கு துணை நிலை ஆளுநரின் அனுமதியை பெறவில்லை.
முன்னதாக நேற்று நடைபெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்தில், தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஜனவரி 1, 1992 முதல் நவம்பர் 30, 2015 வரை நடைபெற்ற முறைகேடுகள் (acts of omission and commission) குறித்து கோபால் சுப்பிரமணியம் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை செய்து மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்காக கோபால் சுப்பிரமணியத்துக்கு ரூ. 1 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதனிடையே ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநருக்கு அரசு சார்பில் எவ்வித கடிதமும் அனுப்பப்படவில்லை என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


