தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெலங்கானாவில் படுபயங்கரம்: 22 பேரை வாளால் தாக்கிய இளைஞர் சுட்டுக் கொலை

தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் 28 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூர்மையான வாளால் 22 பேரை கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :22 டிசம்பர் 2015, 9:12 am

தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் 28 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் கூர்மையான வாளால் 22 பேரை கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்திய இளைஞரின் பெற்றோரும் ஒரு ஆட்டோ ஓட்டுநரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு காவலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலரும் வாளால் தாக்கப்பட்டதில் ரத்த காயங்களுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து கரீம்நகர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ராமா ராவ் கூறுகையில், லஷ்மி நகரைச் சேர்ந்த பல்விந்தர் சிங் (28) இன்று காலை 7 மணியளவில் தனது பெற்றோருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், வீட்டில் இருந்த வாளை எடுத்து பெற்றோரை தாக்கியுள்ளார்.

அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழ, ஆத்திரம் அடங்காத பல்வீர் சிங், வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆட்டோ ஓட்டுநர் உட்பட கண்ணில் கண்டவர்களை எல்லாம் வாளால் தாக்கியுள்ளார்.

இது குறித்து அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினரையும் கடுமையாக தாக்கியுள்ளான். இதில் 3 தலைமைக் காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

வேறு வழியின்றி, காவல்துறையினர் பல்விந்தர் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பல்விந்தர் சிங் பணியாற்றி வந்தார் என்பதுதெரிய வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.