தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாநிலங்களவை அனைத்துக் கட்சி கூட்டம்: ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்ற ஒப்புதல் இல்லை

எஞ்சியுள்ள மூன்று நாள்களில் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஆறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளித்த எதிர்க்கட்சிகள், சரக்கு-சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

News image
Updated On :18 டிசம்பர் 2015, 11:58 am

எஞ்சியுள்ள மூன்று நாள்களில் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள ஆறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளித்த எதிர்க்கட்சிகள், சரக்கு-சேவை வரி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அதன் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஹமித் அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை முடங்கியுள்ளது குறித்து கவலை தெரிவித்தன. நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் நேரம் கூட்டத்தை நடத்துவதற்கு கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி கூறினார்.

அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விடுத்த கோரிக்கை குறித்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெளிவான பதில் ஏதும் அளிக்கவில்லை என்றார் நக்வி.

எஸ்.சி.எஸ்.டி திருத்த மசோதா, ஆள் கடத்தல் தடுப்பு மசோதா, அணுசக்தி திருத்த மசோதா, வர்த்தக நீதிமன்றங்களை அமைப்பதற்கான மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் கூறின.

கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், கூட்டத்தில் புதியதாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. எஸ்.சி.எஸ்.டி திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது என்றார். மேலும், சரக்கு-சேவை வரி மசோதா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றார்.

எஞ்சியுள்ள மாநிலங்களவை கூட்டத்தின்போது நாட்டில் தற்போது நிலவும் முக்கிய பிரச்னைகளான விலைவாசி உயர்வு, வெள்ளம் மற்றும் விவசாய வறட்சி, சகிப்புதன்மை இல்லாமை, அருணாலச பிரதேசம் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.