தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐ.பி.எல் முறைகேடு: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது குற்ற நடவடிக்கை

ஐ.பி.எல். முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

News image
Updated On :18 டிசம்பர் 2015, 4:40 pm

ஐ.பி.எல். முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:

ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேடு தொடர்பாக கம்பெனிகள் சட்டத்தின் 211 பிரிவு படி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கையை தொடங்குமாறு கம்பெனிகள் விவாகரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் இயக்குநர் அறிக்கையில் பணியாளர்கள் குறித்த விவரங்கள் (பிரிவு 217ஏ) இல்லாதது குறித்து சுட்டிகாட்டப்பட்டுள்ளதோடு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல, டெல்லி டேர்டெவில் அணியின் உரிமையாளரான ஜி.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 211 பிரிவின் கீழ், நோட்டீஸ் அனுப்ப கம்பெனிகள் பதிவுத் துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ், ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ் அணி உரிமையாளர்களின் கம்பெனிகள், 1956 ஆம் ஆண்டைய கம்பெனிகள் சட்டப்படி எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை.

எனினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரான நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது பிரிவு 383ஏ, 211 ஆகியவற்றின் கீழ் நோட்டீஸ் அனுப்பட்ப்பட்டுள்ளது. எனினும் அவைகள் எல்லாம் பின்னர் சரிசெய்யப்பட்டுவிட்டன.

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான கேபிஹெச் டீரிம் கிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு, கடந்த 2008-09 ஆம் ஆண்டைய இருப்பு மற்றும் ஆண்டு வருவாய் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாதது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் ஆண்டறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதேபோல, மும்பை இண்டியன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகிகளுடம் பல்வேறு விதிமுறைகள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.