மத்திய அமைச்சர் வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் பேசும் போது காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் கூக்குரல் எழுப்பி கலாட்டா செய்தனர்.
ஹரியாணா மாநிலத்தில் இரு தலித் குழந்தைகள் காரை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங், 'யாராவது நாய்கள் மீது கல்லெறிந்தாலும் அரசை குறை கூறுகிறார்கள்' என்றார்.
புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராகவும் வி.கே.சிங் பதவி வகித்து வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் வி.கே. சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் மாநிலங்களையில் பங்கேற்ற வி.கே.சிங், புள்ளியல் துறை குறித்த அறிக்கையை சமர்பிப்பதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் அழைத்தார்.
அப்போது, அவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கூக்குரலிட்டு கலாட்டா செய்தனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ்வாதி உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். சில உறுப்பினர்கள் 'வி.கே.சிங் டவுன் டவுன்' என கோஷமிட்டனர்.
சிங் அறிக்கை சமர்பித்து முடிக்கும் வரை அவர்கள் கூக்குரலிட்டப்படியே இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு துளிகள்...

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அலை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


