நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
லக்னோவில் உள்ள மெகி குடோன்களிலிருந்து மாதிரிகளை எடுத்து சென்று சோதனை நடத்துமாறு மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பாண்ட் ஆகியோர் இன்று உத்தரவிட்டனர்.
முன்னதாக கடந்த 9 ஆம் தேதி தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் வெளிட்ட உத்தரவில், மேகி நூடுல்ஸை சென்னையில் உள்ள சோதனை மையத்தில் ஆய்வு செய்ய வலியுறுத்தியிருந்தது.
இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேகி நூடுல்ஸை மைசூரில் உள்ல மத்திய அரசு சோதனை மையத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், தரம்குறைந்த மேகி நூடுல்ஸை விற்பனை செய்தது தொடர்பாக ரூ. 640 கோடி கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் தொடர்ந்து நடத்துவதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


