நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஊழல் அதிகாரிகளை கேஜரிவால் பாதுகாக்கிறார்: பாஜக குற்றச்சாட்டு

சிபிஐ சோதனை விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கேஜரிவால் ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார் என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது.

News image
Updated On :16 டிசம்பர் 2015, 9:40 am

தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கேஜரிவால் ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார் என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது.

தில்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்து இன்று கருத்து தெரிவித்திருந்த கேஜரிவால், ராஜேந்திர குமார் வழக்குக்கு தொடர்பில்லாத ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.  மேலும், தில்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான கோப்புகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர் என்றார்.

இதை கண்டித்த தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யா, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் கேஜரிவால் கரைபடிந்துள்ள தமது கட்சி எம்.எல்.ஏ.க்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்க போராடி வருகிறார். இதனால் அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த 'யூ-டர்ன்' (தனது கருத்தை மாற்றி கொள்ளுதல்) விருது வழங்கலாம் என்றார்.

தில்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீது கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதற்கு ஏன் கேஜரிவால் குழப்பமடைகிறார்.

அவரது செயல்பாடுகளும், பேச்சுகளும் அவர் குழம்பிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்றார்.

அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்ற அமைச்சர் ஜித்தேந்திர சிங், அவை வெட்கக்கேடானது என்றார்.

சிபிஐ என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு,  ஆம் ஆத்மி கட்சியினர் கவலைப்படவேண்டாம். சிபிஐ தனது கடமையை தொடர்ந்து செய்யும் என்றார்.

ராஜேந்திரகுமார் மீது ஆம் ஆத்மி உறுப்பினரே புகார் அளித்துள்ள நிலையில், தற்போது அக்கட்சியினர் என்ன செய்ய போகின்றனர் என்றார் நாயுடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.