நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ராஜஸ்தானை வாட்டும் குளிர்: மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கு குறைந்தது

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வீசி வரும் கடும் குளிர்காற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 டிசம்பர் 2015, 10:32 am

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வீசி வரும் கடும் குளிர்காற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சாரு நகரின் வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது.

வடமேற்காக வீசி வரும் குளிர்காற்றில் மாநிலம் முழுவதும் ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் 10 ரயில்கள் 30 நிமிஷங்கள் முதல் 9 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி, ஹரியானா, உத்ர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் கூறினார்.

இதனிடையே ஜெய்ப்பூரில் இன்று காலை 5.4 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது. இது வழக்கமான குறைந்த வெப்பநிலையைவிட 5 டிகிரி குறைவாகும். இதேபோல சிக்கரில் குறைந்த வெப்ப நிலை 3.5 டிகிரியாகவும், ஸ்ரீகங்ககாநகரில் 3.9 டிகிரியாகவும் பதிவானது.

தார்பாலைவனத்தின் நுழைவுவாயில் என்ற அழைக்கப்படும் சாரு நகரின் வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது.

வரும் 24 மணி நேரத்துக்கு இதே குளிர்நிலை தொடரும் என்றும், வெப்பநிலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.