நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மொபைல் இணைப்பு துண்டிப்பு: டிராய், மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மொபைல் போன்களின் அழைப்பு துண்டிக்கப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு டிராய் மற்றும் மத்திய அரசுக்கு

News image
Updated On :14 டிசம்பர் 2015, 12:17 pm

பேசிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன்களின் அழைப்பு துண்டிக்கப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு டிராய் மற்றும் மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பேசிக் கொண்டிக்கும் போது அழைப்பு துண்டிக்கப்படுவதாக மொபைல் சேவை பயன்படுத்தி வருபவர்கள் நீண்ட நாள்களாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்களை கண்காணித்து வரும் தொலைபேசி ஒழுங்காற்று ஆணையம் (டிராய்), ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல், பேசிக் கொண்டிருக்கும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டால் மொபைல் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு ரூபாய் திருப்பி அளிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி உத்தரவிட்டது. இது வருகிற ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதை எதிர்த்து மொபைல் நிறுவனங்களின் கூட்டமைப்புகளான செல்லுலார் ஆபரேட்டர் அசோஷியேசன் ஆப் இந்தியா, அசோஷியேசன் ஆப் யூனிபைட் டெலிகாம் சர்வீஸ் புரோவைடர்ஸ் ஆப் இந்தியா தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

டிராய் உத்தரவு முரண்பாடாகவும், செல்லுலார் சேவைய அழிக்கும் வகையிலும் உள்ளது. மேலும், சட்ட விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு டிராய்க்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டன.

வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஜி.ரோகிணி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத் ஆகியோர் இவ்வழக்கில் மத்திய அரசு, டிராய் ஆகியோர் தங்களது பதில் மனுவை வருகிற 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.