தாஜ்மகால் அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாயானத்தை சீரமைப்பது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆக்ரா அருகேயுள்ள 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயானத்திலிருந்து வெளியேறும் புகையால், தாஜ்மகால் பாதிப்படைகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்துடன் தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றிருந்த நீதிபதி குரியன், மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் தாஜ்மகாலின் வெள்ளை மார்பிள் பாதிக்கப்படுவதை கண்டறிந்தார். எனவே, அந்த மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியிருந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த உத்தர பிரதேச அரசு, அந்த மயானத்தை மின் மயானமாக தகுதி உயர்த்த முடிவு செய்து செய்திருப்பதாகவும், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் பழைய மயானத்தை அடுத்த ஆண்டு முதல் கைவிடவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாகுர் மற்றும் நீதிபதி சி.நாகப்பன் ஆகியோர், உத்தர பிரதேச அரசு இப்பிரச்னை குறித்து ஆறு மாதத்துக்குள் விரிவான திட்டம் தயாரிக்குமாறு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

சபரிமலை வழக்கு: ‘வாட்ஸ் ஆப் பல்கலைக்கழக தகவல்களை ஏற்க முடியாது’ - உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


