நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியர்களுக்கான ஜப்பான் விசா நடைமுறையில் தளர்வு

குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.

Updated On :14 டிசம்பர் 2015, 11:54 am

குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.

இந்தியா வரும் ஜப்பானியர்களுக்கு, அவர்கள் வந்திறங்கும்போது விசா வழங்கும் முறை வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இந்திய அரசு அறிவித்தது.

இதன்பலனாக, ஜப்பான் அரசும், குறுகியகாலம் மட்டும் ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா நடைமுறையை தளர்த்தி உள்ளது.

தற்போது 15 நாள்களுக்கு மட்டும் வழங்கப்படும் விசா இனி 30 நாள்களுக்கு வழங்கப்படும். மேலும், மூன்றாண்டுகளுக்கான விசா இனி ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுப்படியாகும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இது வருகிற ஜனவரி 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஏற்பட்ட மக்களுக்குள் ஒருங்கிணைப்பு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசா நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், வியாபாரம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் பலமுறை வந்து செல்வதற்கான விசா தற்போது 5 ஆண்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இனி அது 10 ஆண்டாக உயர்த்தப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இவ்வகை விசாக்களை இந்தியர்களுக்கு ஜப்பான் வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.