நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் அலுவலகம் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனகூறியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் சொத்துகளை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா, ராகுல் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் வருகிற 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை முடக்கினர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது எங்களை பழிவாங்கும் நோக்குடன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொடரப்பட்டதாகும். இதில் 100 சதவீதம் அரசியல் உள்ளது. மக்களின் பிரச்னைகளை எழுப்பும் எதிர்க்கட்சியினரை முடக்கும் அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
பாஜக பதிலடி
ராகுலின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, இதை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு ராகுலுக்கு போதிய தைரியம் இல்லை என்றார்.
நாடாளுமன்றத்தை முடக்குவதின் பின்னணியில் ராகுல் உள்ளார் என குற்றம்சாட்டிய ரூடி, ராகுல் பிரமதர் அலுவலகம் குறித்த கூறிய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இப்பிரச்னை குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தை முடக்க கூடாது. அரசும், நாடாளுமன்றமும் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

சிவகங்கை தொகுதியில் ஜனநாயகக் கடமையாற்றிய வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


