ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிரதான நேரம்: 12 நிமிஷத்துக்கும் அதிகமான விளம்பரங்கள் ஒளிபரப்பும் தனியார் தொலைகாட்சிகள்

இந்தியாவில் உள்ள 100க்கு அதிகமான தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் பிரதான நேரங்களில் 12 நிமிஷத்துக்கும் அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்புவதாக

News image
Updated On :8 டிசம்பர் 2015, 4:16 pm

இந்தியாவில் உள்ள 100க்கு அதிகமான தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் பிரதான நேரங்களில் 12 நிமிஷத்துக்கும் அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்புவதாக மத்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (TRAI) கூறியுள்ளது.

தனியார் தொலைகாட்சிகளில் அளவுக்கு அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதாக பார்வையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து டிராய் தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிஷத்துக்கு அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பக் கூடாது என கடந்த 2013ல் அறிவித்தது.

இதற்கு தடை கோரி தொலைகாட்சி நிறுவனங்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அடுத்த உத்தரவு வரும் வரை இதற்கு தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும்,  தொலைகாட்சி நிறுவனங்கள் தாங்கள் ஒளிபரப்பு குறித்த விவரங்களை டிராய்க்கு அளிக்க ஆணையிடப்பட்டது.

இதன்படி, கடந்த ஜூன் 29 ஆம் தேதி முதல் செப்டம்பர்  27 ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 27 கட்டண செய்தி தொலைகாட்சி நிறுவனங்களும், 112 கட்டண தொலைகாட்சி நிறுவனங்களும் 12 நிமிஷத்துக்கும் அதிகமாக விளம்பரங்களை ஒளிபரப்பியது தெரியவந்துள்ளது.

இதில் பல தொலைகாட்சிகள் ஒரு மணி நேரத்தில் 20 நிமிஷம் அளவுக்கு விளம்பரங்களை காட்டியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.