ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்த சட்டத் திருத்த மசோதாவை பரிசீலித்த காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நிலைக் குழு, தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் குழுவில், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறலாம்.
இதனால், பிரதமர் நரேந்திர மோடியைத் தலைவராகக் கொண்ட லோக்பால் தேர்வுக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்வதிலும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.
லோக்பால் அமைப்புக்கு உச்சபட்ச அதிகாரமும், அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் சிவிசியும், சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
லோக்பால் அமைப்பின் தலைமை அலுவலகம், சிவிசி தலைமையகத்துக்குள் இடம்பெற வேண்டும்.
சொத்து விவரங்கள் வெளியிட தேவையில்லை:
அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது தேவையற்றது. இது, ஆங்கிலேயர் கால நம்பிக்கையற்ற, சந்தேக புத்தியின் வெளியிப்பாடு ஆகும். இந்த விதி, முறைகேடுகளுக்கு எதிராக பாதுகாப்பதை விட, அரசு ஊழியர்களை துன்புறுத்துவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எனினும், ஓர் அரசு ஊழியர், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்திருக்கிறாரா? என்பதைக் கண்டறிய மின்னணு கண்காணிப்பு முறையை பின்பற்றலாம்.
அரசு நிர்வாகத்தில் முறைகேடு புகார்களை விசாரிப்பதற்கு மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்குவதற்கு லோக்பால் சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


