ஃபேஸ்புக் பற்றிய புதிய ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களை ஃப்ரொஃபைல் படமாக வைத்திருப்பார்கள். சிலர் ஒரே ஃபோட்டோவை நிரந்தரமாக வைத்திருப்பார்கள். சிலர் எப்போதாவது புகைப்படத்தை மாற்றுவார்கள். இன்னும் சிலர் தினமும் புகைப்படத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரே புகைப்படத்தை வைத்திருப்பவர்களுக்கும், எப்போதாவது ஃபோட்டாவை மாற்றுபவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அடிக்கடி தங்கள் ஃபோட்டோவை அப்லோட் செய்பவர்களுக்குத் தான் அனேக பிரச்னைகள் என்கிறது இந்த ஆராய்ச்சி.

இப்படி அடிக்கடி, நொடிக்கு நொடி தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஃப்ரொஃபைல் படம் மாற்றுபவர்கள் ஒரு கட்டத்தில் மன பாதிப்புக்களுக்கு உள்ளாகி கடுமையான சோகத்துக்கும் காரணம் தெரியாத ஒருவித நடுக்கத்துக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் மன நலமும் பாதிப்படைகிறது என்றும் யேல் பல்கலைகழகம் மற்றும் சான் டியகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சேர்ந்து ஃபேஸ்புக் பயன்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் பேராசிரியர்களான ஷாக்யா மற்றும் நிகோலஸ் க்றிஸ்டாகிஸ் ஆகியோர். இதற்காக ஃபேஸ்புக் 5208 பதிவர்களை 2013 ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை இவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதிகப்படியாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் கூடிய விரைவில் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். எப்போதும் மானிட்டரில் வாழும் அவர்கள் சமூக அக்கறையை இழக்கிறார்கள், மேலும் அவர்களது உடல் மற்றும் மன நலனும் பெருமளவு பாதிப்படைகிறது என்று பதிவு செய்கிறது மெட்ரோ.கோ.யூகே (Metro.co.uk ) எனும் இணையதளம்.

மேலும் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுவது அல்லது மற்றவர்களுடைய பதிவுகளுக்கு அதிகப்படியாக லைக் போடுவது, போன்ற செயல்கள் ஃபேஸ்புக் பிரியர்களை நாளாவட்டத்தில் கடுமையான மனச் சிக்கல்களுக்குள் இழுத்துச் சென்றுவிடும் என்கிறது இந்த ஆய்வு.
இந்த ஆராய்ச்சி முடிவு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


