டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கருங்காலி தேனீர் என்றால் என்ன?

நரம்புத் தளர்ச்சி,  கை , கால் நடுக்கம், உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்த குறைபாட்டை நீக்கும் அற்புதமான தேனீர். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:14 am

கோவை பாலா

தேவையான பொருட்கள்

கருங்காலிப்பட்டை -  கால் கிலோ 
மருதம்பட்டை - கால் கிலோ
சுக்கு - 50 கிராம் 
ஏலக்காய் - 50 கிராம்

செய்முறை

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

பயன்கள் : இதனால் நரம்புத் தளர்ச்சி  , கை ,கால் நடுக்கம், உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைபாட்டை நீக்கி உடலை எப்பொழுதும் புத்துணர்வுடன் வைக்க உதவும் அற்புதமான தேனீர். 

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.