சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த இயற்கை உணவு
கொய்யாப் பழத்தை நன்கு கழுவி புட்டுத் துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.


கொய்யாப் பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்
கொய்யாப் பழம் - 100 கிராம்
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கொய்யாப் பழத்தை நன்கு கழுவி புட்டுத் துருவல் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தண்ணீர் சேர்த்து மத்தால் நன்கு கடைந்து மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள், உப்பு சேர்த்து கலந்த பருகவும்.
பலன்கள்
இந்த கொய்யாப் பழ ஜூஸை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உண்ணும் உணவுடன் இணை உணவாக குடித்து வந்தால் மிகச் சிறந்த பலனை கொடுக்கும். குறைபாடு நீங்கும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...