லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா? உடல் பலம் அதிகரிக்க இதை சாப்பிடுங்க!

மேலும் சத்துக்கள் தேவை எனில் முந்திரி, பாதாம், ஜவ்வரிசி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

News image
Updated On :13 அக்டோபர் 2019, 8:33 am

சத்து மாவு கஞ்சி

ஒரு தம்ளர் நவதானிய சத்துமாவு கஞ்சியில் குறைந்தது 300 கலோரிகளாவது இருக்கும். இது நீங்கள் சேர்க்கும் தானியத்துக்கு ஏற்றாற்போல் மாறுபடும். நவதானிய சத்துமாவைத் தயாரிக்க தேவைப்படும் தானியங்கள் கேழ்வரகு, சாமை, வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, கோதுமை, சோளம் மற்றும் ஓட்ஸ். சுவைக்காகவும் மேலும் சத்துக்கள் தேவை எனில் முந்திரி, பாதாம், ஜவ்வரிசி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

எருமைப் பால்

ஒரு தம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் காலை ஒரு தம்ளர் இரவில் ஒரு தம்ளர் எருமைப் பால் பருகி வந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.

பாதாம் பால்

சிலருக்கு எருமைப் பால் பிடிக்காது. அவர்கள் ஹாட் சாக்லேட் அல்லது பாதாம் பால் பருகலாம். ஒரு தம்ளர் பாதாம் பாலில் 158 கலோரிகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்கச் செய்ய தினமும் இரண்டு தம்ளர் பாதாம் பால் குடித்தால் கணிசமான அளவில் உடல் எடை அதிகரிக்கும்.

லஸ்ஸி

லஸ்ஸியில் 159 கலோரிகள் உள்ளது. லஸ்ஸி மிகவும் சுவையும் சத்தும் நிறைந்த பானம். இது ப்ரோபயாடிக் சத்துக்கள் நிறைந்தது. கெட்டியான தயிரில் சர்க்கரை சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும். 

ஸ்மூத்தி

ஒரு தம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் உள்ளன. இதில் ப்ரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. தவிர கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய இதை தினமும் குடிக்கலாம்.

தேங்காய் பால்

சிலருக்கு பால் பொருட்கள் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் தேங்காய் பால் அருந்தலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவின்றி இதில் உள்ளது. கோடை காலங்களில் ஒரு தம்ளர் தேங்காய் பாலை குடித்தால் உடல் வெப்பத்தின் அதீத தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும். உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றாமல் இருக்கும். 

பழரசம்

ஒரு தம்ளர் பழரசத்தில் 200-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். அந்தந்த பழங்களுக்கு ஏற்றபடி கலோரி மாறுபடும். பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால்தான் அதன் முழுப்பலனைப் பெற முடியும். பழரசமாகத் தயாரித்துப் பருகுகையில், அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.  எந்தவகை ஜூஸானாலும் அதை அதிகாலையில் குடித்தால் உடல் எடை நன்கு அதிகரிக்கும். 

மாம்பழ மில்க் ஷேக்

மாம்பழத்தில் 130 கலோரிகள் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், மாம்பழத்தையும் பாலையும் ஒன்றாகப் பருகுங்கள். ஒரு தம்ளர் மாம்பழ மில்க் ஷேக்கில் அந்தளவுக்கு கலோரிகள் அதிகம். மாம்பழம் தவிர்த்து ஆப்பிள், சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கும் உடல் எடை அதிகரிக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.