/

உங்கள் உடலை அழகாக்க உதவும் ஆரோக்கியத் துவையல்

இந்த துவையலில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால் தினமும் சுடு சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் மேனி அழகு பெற்று பளபளக்கும்

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:32 am

கோவை பாலா

மணத்தக்காளிக் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை  - 200 கிராம்

நெய் - 10 கிராம்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு -  30 மி.லி
உளுந்து -  50 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி
உப்பு , பெருங்காயம் -  தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கீரையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் பசு நெய் ஊற்றி அதில் உளுந்து, பெருங்காயம், தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு  கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி  கொள்ளவும்.
  • வதக்கிய கீரையுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியில் அரைத்த விழுதை தாளித்து இறக்கவும்.

பலன்கள் : இந்த துவையலில் வைட்டமின் 'சி' நிறைந்துள்ளதால் தினமும் சுடு சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் மேனி அழகு பெற்று பளபளக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.