

அகத்திக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
அகத்திக் கீரை - ஒரு கட்டு
தக்காளி - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
மைதா மாவு - 3 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
செய்முறை
- முதலில் கீரையைச் சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் கீரையைப் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி சாறை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும்.
- வாணலியில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி மிளகுத் தூள் கலந்து, வடித்து வைத்துள்ள சாறுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- அடுத்து வாய் அகலமான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் விட்டு உருக்கி அதில் மைதா மாவைத் தூவி கிளறி, நன்கு சிவந்ததும் ஏற்கனவே தயாரித்துள்ள கீரைசாறையும் சேர்த்து, உப்புப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
பலன்கள்
- இந்த சூப் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் அருமருந்து .
- இதனை அனைவரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது தொடர்ந்து குடித்து வந்தால், பலவிதமான நோய்களை விரட்டி உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு நன்றாக மென்று உண்ணவும்.
குறிப்பு
- அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
- பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

