டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இடுப்பு வலியை குணப்படுத்த உதவும் உன்னதமான கஞ்சி

ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:54 am

கோவை பாலா

 
பிரண்டைக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
பிரண்டை  - ஒரு கைப்பிடி
முருங்கை இலை - ஒரு கைப்பிடி
தூது வளை - ஒரு கைப்பிடி
அரிசி நொய் - 100 கிராம்

செய்முறை

முதலில் பிரண்டை, முருங்கை இலை மற்றும் தூதுவளை ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு கொதிக்க வைத்து நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீருடன் அரிசி நொய்யைப் போட்டு நன்கு வேக வைத்து கஞ்சியாக காய்ச்சி  இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை இரண்டு பாகமாக பிர்த்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி மற்றும் உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்த உதவும் உன்னதமான ஆரோக்கிய கஞ்சி. இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.