குழந்தைகளுக்கும், உடல் நலிவடைந்தவர்களுக்கும் உகந்த கஞ்சி
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


சோளக் கஞ்சி
தேவையான பொருட்கள்
காரட் துருவியது - அரை கப்
சோள விதை அரைத்தது - அரை கப்
அரிசி - ஒரு கப்
தண்ணீர் - 2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்தப் பிறகு அதில் அரிசி மற்றும் சோளத்தை போடவும். நன்கு வெந்ததும் அதனுடன் காரட் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள் : இந்தக் கஞ்சியை குழந்தைகளும் , நீண்ட நாள் உடல் நலிவடைந்துள்ளவர்களும் காலை வேளை உணவாக உண்ணுவதற்கு உகந்த கஞ்சியாகவும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கக் கூடிய உகந்த உணவு.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...