/

கருப்பைக் கோளாறுகள் மற்றும் வெள்ளைப்படுதல் குறைபாட்டை சீர்செய்யும் பழச்சாறு 

உலர்ந்த அத்திப் பழத்தை தண்ணீரில் ஆறுமணி நேரம் ஊறவைக்கவும். ஊற வைத்தப் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:41 am

கோவை பாலா

அத்திபழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

உலர்ந்த அத்திப் பழம் - 3
தண்ணீர் - 100 மி.லி
தேன் - அரை தேக்கரண்டி
சூடான பால் - 25 மி.லி
ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு

செய்முறை

உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீரில் ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தப் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். விழுதுடன் தேன் மற்றும் சூடான பால் சேர்த்து கலக்கி அதனுடன் தேவையான அளவு ஏலக்காய்த் தூள் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வரவும்.

பயன்கள் : இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் கருப்பைக் கோளாறுகள் மற்றும் நாட்பட்ட வெள்ளைப்படுதல் போன்ற குறைபாடுகளை சீர் செய்யும் அற்புத அதிசய ஜூஸ் இந்த அத்திப் பழ ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.