எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெயிலுக்கு இதமாக கம்மங்கூழ் குடிக்கலாம் வாங்க!

கம்பு குருணையைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:48 pm

ராக்கி

தேவையான பொருட்கள்

கம்பு குருணை - 1 கப்
தண்ணீர் - 3 கப்
தயிர் - 1 கப்
மோர் - 2 கப்
வெங்காயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கம்பு குருணையைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வரை நன்றாக வேக விடவும். வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக நீர்க்கக் கரைக்கவும். சுவையான கம்மங்கூழ் தயார்.

வேக வைத்த கம்பை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்புருண்டைகளைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.