மிக மிக முக்கியமாக அல்சீமர் என்னும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் முட்டைக்கோஸை தினமும் உணவில் சேர்த்துவந்தால், மறதி நோயிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணம் பெறலாம் என்று மருத்துவர்களே கூறுகிறார்கள். சல்ஃபர், வைட்டமின் சி இரண்டுமே முட்டைக்கோஸில் நிறைந்திருப்பதால், இதை உண்பதன் மூலம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடக்கு வாதம் இவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் சத்துக்களை, இந்தக் காய் உள்ளடக்கி இருப்பதால், எலும்புகள் வலுவூட்டப்படுகின்றன.