என்னதான் தேநீரின் பிறப்பிடம் சீனா என்றாலும், இந்தியாவின் பாரம்பரிய தேநீர் வகைக்கு என தனி சிறப்புண்டு. மசாலா டீ அதாவது ‘சாய்’ என்று பரவலாக அழைக்கப்படும் இதில் தேயிலையுடன் ஏலக்காய், இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகுகிறோம். இது நம் நாட்டின் இயற்கை சூழலுக்கு ஏற்ற ஒரு பானமாகும். இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களுக்குமே தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு என்பது பலரும் அறிந்ததே. இது உடல் வீக்கம், தொண்டை பிரச்னை, சளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என ஒரு சர்வ நோய் நிவாரணியாக செயல்படுகிறது.