டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிறப்பான சிறுதானியம் குதிரைவாலி

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:16 pm

தினமணி

ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவ பயன்கள் - உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்டாக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. 

குதிரைவாலியில் ஒரு சத்தான ரெசிபி - குதிரைவாலி இடியாப்பம்

தேவையானவை: 

குதிரைவாலி அரிசி - 1/2 கிலோ 
தேங்காய்த் துருவல் - 1/4 கப், 
வெல்லம் - 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப, , 

செய்முறை: 

குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். நீரை நன்றாக வடித்து விட்டு ஈரம் காய்ந்ததும், மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க முடியவில்லையெனில் மாவு மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் நல்லெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம் தயார். பொடித்த வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.