பலருக்கும் காலை உணவாகவும், மாலை உணவாகவும் இருப்பது தேநீரும் பிஸ்கட்டும்தான். ஆனால், பல ஆண்டு காலமாக நாம் சாப்பிட்டு வரும் பிஸ்கட், தற்போது உடலுக்கு உகந்ததல்ல என்று சிவப்புக் கொடி காட்டப்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல லட்சக்கணக்கான பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டு, கடைகளில் விற்பனைக்கு வந்து, ஏராளமான மக்கள் வாங்கிச் சென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசும் பிஸ்கட்டுகளை சிவப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியிருக்கிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நொறுக்குத் தீனிகளைப் பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்களில் பிஸ்கட்டுகளும் இடம்பெறத் தொடங்கிவிட்டது.
தேநீர் என்றாலே பிஸ்கெட் இல்லாமல் நிறைவடைவதில்லை. பெயர்களும் வடிவங்களும் சுவைகளும் மாறலாம். ஆனால், அதில் இருக்கும் உட்பொருள்கள் மாறுவதில்லை. நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும், மணமூட்டிகளும் தான் மாறுகின்றன. எதுவாக இருந்தாலும் நல்லதா என்பதை சரிபார்த்தே வாங்க வேண்டும் என்கிறார்கள்.
அதாவது, ஒரு பிஸ்கட் வாங்கும்முன் கவனிக்க வேண்டியது என்ன என்பது குறித்து சுகாதார நிபுணர்கள் கூறும் அறிவுரையில் முதலிடம் அதன் லேபிள்.
உண்மையில் ஒரு லேபிளைப் பார்த்து வாங்கினால், நல்ல சத்தான பிஸ்கட்டுகளை வாங்க முடியும் என்றும் கூறுகிறார்கள். அதாவது பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோருக்கு ஏற்படும் நோய்களில் இந்த மூன்றும் முதலிடங்களில் உள்ளன. எனவே, நல்ல பிஸ்கட் என்பதற்கான லேபிளில் முதல் மூன்று உள்பொருள்கள்தான் கவனிக்கத்தக்கன.
அதாவது சுத்திகரிக்கப்பட்ட மாவு, ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட கொழுப்பு அல்லது சர்க்கரை என்ற பெயர்கள் அந்த லேபிளில் இருந்தால், அவைதான் அந்த பிஸ்கட்டுக்கான சிவப்புக்கொடி.
அதேவேளையில், நார்ச்சத்து, தானியம், சிறுதானியம், சர்க்கரை இல்லை என்பவை பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவற்றை வாங்கி சாப்பிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால், ஒருபோதும் தேநீருடன் பிஸ்கட் சாப்பிடுவது எப்போதுமே உடலுக்கு நல்லதல்ல. அதாவது தேநீரிலும் சர்க்கரை, பிஸ்கட்டுகளிலும் தேவையற்ற சர்க்கரையை ஒன்று சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கிழைக்கும். எப்போதாவது என்றால் பரவாயில்லை. எப்போதுமே என்றாலோ நாள்தோறும் இரண்டு வேளை என்றாலோ அதற்கு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆக வேண்டும் என்கிறார்கள்.
ஒன்று, தேநீரை தவிர்த்துவிட்டு இரண்டு சத்தான பிஸ்கட்டுகளை மட்டும் சாப்பிடலாம், அல்லது சர்க்கரை இல்லாமல் சர்க்கரைக் குறைவான பால் இல்லாத தேநீரைப் பருகலாம் என்பதே அனைத்து உடல்நல நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
Summary
About deciding whether to buy a biscuit or not.
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா? தவெக கேள்வி
பலாக்காய்க் கறி

இன்று தங்கம் வாங்கலாமா?
'தோபி ஜி'
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


