எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதல்ல குளிர்பானம் அப்புறம்தான் தண்ணீர்! அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

News image
water
Updated On :31 ஜனவரி 2024, 10:22 am

Uma Shakthi

தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் உங்கள் உடலில் தண்ணீர் மட்டுமே நீர்ச்சத்தை அதிகரிப்பதில்லை, அதைவிட உடலில் அதிக நேரம் நீர்ச்சத்தை தக்க வைக்கக் கூடிய பானங்கள் உள்ளன  என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, தண்ணீர் நீர்ச்சத்துக்கான பானம் அல்ல என்று கண்டறிந்தனர்.

இயற்கையாகக் கிடைக்கும் குளிர்ச்சியான நீர் தாகத்தைத் தணிக்கும் என்றாலும், ஒரு நபரை நீர்ச்சத்துடன் நெடுநேரம் வைத்திருப்பதில் இனிப்பு, கொழுப்பு அல்லது புரதம் நிறைந்த பானங்கள்தான் முன்னணியில் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

2016-ஆம் ஆண்டில் ‘தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில்’ வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஸ்கிம் செய்யப்பட்ட பால் அதிக நீர்ச்சத்து உள்ளது என்றும் அதைத் தொடர்ந்து ஓரல் ரி ஹைட்ரேஷன் சல்யூஷன் (oral rehydration solutions),  கொழுப்புச் சத்துள்ள பால், ஆரஞ்சு சாறு, கோலா, டயட் கோலா, குளிர்ந்த தேநீர், தேநீர், விளையாட்டு பானம், கிணற்று தண்ணீர், செறிவூட்டப்பட்ட தண்ணீர், மற்றும் காபி ஆகியவை அதிக நீர்ச்சத்துள்ளவை என்கின்றன ஆய்வுகள்.

புனித ஆண்ட்ரூஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியரான ஆய்வு ஆசிரியர் ரொனால்ட் மகான் (Ronald Maughan) கருத்துப்படி, நம் உடல்கள் பானங்களுக்கு நன்கு பழக்கப்பட்டுள்ளது என்பதே காரணம். மேலும் பானத்தின் அளவும் மற்றுமொரு காரணம்.  நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக அது ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது, அதன்பின் அது உடலின் திரவங்களை நீர்த்துப்போகச் செய்து உங்களை ஹைட்ரேட் செய்கிறது.

மற்றொரு காரணி பானத்தின் ஊட்டச்சத்து கலவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பால் தண்ணீரை விட அதிக நீரேற்றம் கொண்டதாகக் காணப்பட்டது, ஏனெனில் அதில் சர்க்கரை லாக்டோஸ், சில புரதம் மற்றும் சில கொழுப்பு உள்ளது. பாலில் சோடியமும் உள்ளது, இது ஒரு கடற்பாசி போல செயல்பட்டு உடலில் உள்ள தண்ணீரைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது.

வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சிரப்பில் (oral rehydration solution) சிறிய அளவு சர்க்கரை உள்ளது, சோடியம் மற்றும் பொட்டாஷியத்துடன் சேர்ந்து, உடலில் நீர் தேக்கத்தை ஊக்குவிக்கிறது.

‘இந்த ஆய்வு நாம் ஏற்கனவே அறிந்தவற்றில் பலவற்றைக் கூறுகிறது: சோடியம் மற்றும் பொட்டாஷியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் சிறந்த நீரேற்றத்திற்கு பங்களிக்கின்றன, அதே நேரத்தில் பானங்களில் உள்ள கலோரிகள் மெதுவாக இரைப்பைக் காலியாக்குகின்றன, எனவே சிறுநீர் கழிப்பதை மெதுவாக்குகின்றன’ என்று சி.என்.என் மேற்கோளிட்டுள்ளது என்றார் மெலிசா மஜும்தார், இவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர் .

பழச்சாறு, கோலா - அதிக செறிவூட்டப்பட்ட சர்க்கரைகளைக் கொண்ட பானங்கள் தண்ணீருடன் ஒப்பிடும்போது, வயிற்றில் இன்னும் சிறிது நேரம் இருக்கும்,  மெதுவாகத்தான் காலியாகும், ஆனால் அவை சிறு குடலுக்குள் நுழைந்தவுடன், சர்க்கரைகளின் அதிக செறிவு சவ்வூடுபரவல் எனப்படும் உடலியல் செயல்பாட்டின் போது நீர்த்துப் போகும்.

இந்தச் செயல்முறையானது இந்த பானங்கள் கொண்டிருக்கும் சர்க்கரைகளை நீர்த்துப் போகச் செய்ய உடலில் இருந்து சிறுகுடலுக்கு ’இழுக்கிறது’. ஜூஸ் மற்றும் சோடா குறைவான நீரேற்றம் மட்டுமல்ல, கூடுதல் சர்க்கரைகளையும் கலோரிகளையும் உடலுக்கு வழங்குகின்றன, அவை திட உணவுகளைப் போல நம்மை நிரப்பாது  என்று மஜும்தார் விளக்கினார்.

சோடா அல்லது தண்ணீர் இதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய இருந்தால், ஒவ்வொரு முறையும் தண்ணீரையே தேர்ந்தெடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு தண்ணீரையே சார்ந்துள்ளது, மேலும் சருமத்தின் அழகு மற்றும் மென்மையை பராமரிப்பதில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.