தனது சிகிச்சை முறையை சான்றுகள் சார்ந்த சிகிச்சை என்று விவரிக்கும் டாக்டர் கிளெபர், போதை பழக்கத்தில் வீழ்ந்தவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களை விடுவிக்க மருத்துவ மற்றும் விஞ்ஞானரீதியாக அணுகவேண்டும் என்று கருதினார். இந்தத் துறையில் தனது முன்னோடிகளில் பலர் செய்ததைப் போல அல்லாமல், நோயாளிகளைத் தண்டிப்பதற்கும் வெட்கப்படச் செய்வதற்குப் பதிலாக, டாக்டர் கிளெபர் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், பல நோயாளிகளை மீட்புப் பாதைக்கு உதவியதுடன், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் மூலம் மீண்டும் போதைக்குட்படுவதை தவிர்க்கவும் உதவினார். தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலகத்தில் துணை இயக்குநராக அவரை நியமித்தார் புஷ்.